செய்திகள்

வள்ளலார் வாழ்ந்த வடலூரை புனித பூமியாக அறிவிக்ககோரி மனிதச்சங்கிலி போராட்டம்

Published On 2017-04-06 22:43 IST   |   Update On 2017-04-06 22:43:00 IST
வள்ளலார் வாழ்ந்த வடலூரை புனித பூமியாக அறிவிக்ககோரி சன்மார்க்க சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வடலூர்:

வள்ளலார் வாழ்ந்த வடலூர், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளன. அவற்றை அகற்றக்கோரி சன்மார்க்க சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

வடலூர் 4 முனை சந்திப்பில் தொடங்கி சத்தியஞான சபை வரை ஏராளமானோர் மனிதச்சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

போராட்டத்தில் சன்மார்க்க சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வெற்றிவேல் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News