செய்திகள்
கொடைக்கானலில் புதுப்பட சி.டி.க்கள் விற்ற மதுரை வியாபாரி கைது
கொடைக்கானலில் புதுப்பட சி.டி.க்கள் விற்ற மதுரை வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரில் உள்ள பிரதான அண்ணாசாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் புதிய திரைப்படங்களின் சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கவண், டோரா உட்பட பல்வேறு புதிய திரைப்படங்களின் சி.டி.க்களை கைப்பற்றி அதனை விற்பனைக்காக வைத்து இருந்த மதுரை தத்தனேரி கீழவைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல பெருமாள் மலை மெயின் ரோடு பகுதியில் அனுமதி இன்றி பெட்ரோல் விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4 லிட்டர் பெட்ரோலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.