செய்திகள்

கம்பம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

Published On 2017-04-06 17:53 IST   |   Update On 2017-04-06 17:53:00 IST
கம்பம் அருகே குடும்ப பிரச்சினையில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது செய்யப்பட்டார்.
தேனி:

கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் சின்னாத்தேவர். இவரது மகன்கள் சத்தியராஜ் (வயது 31), சிவமாயன் (23) அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அவரது தந்தை சமாதானம் செய்தும் கேட்காமல் தொடர்ந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவமாயன் தனது அண்ணன் என்றும் பார்க்காமல் அரிவாளால் சத்தியராஜை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

படுகாயமடைந்த சத்தியராஜ் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவமாயனை கைது செய்தனர்.

Similar News