செய்திகள்

கொடைக்கானல் மேல்மலையில் வெப்பத்தை போக்கிய மழை

Published On 2017-04-06 12:20 GMT   |   Update On 2017-04-06 12:20 GMT
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நேற்று மாலை 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பத்தின் பிடியில் இருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மன்னவனூர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த வெப்பம் கொடைக்கானலையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பகலில் நிலவும் கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

நேற்று மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, கீழானவயல் உள்ளிட்ட கிராமங்களில் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெய்த இந்த மழை இப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் கடந்த வாரம் மேல்மலை கிராமங்களில் பூண்டு, உருளைக்கிழங்கு நடவு பணிகள் நடந்தது. அந்த பயிர்களுக்கு இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி மேல்மலை கிராமங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பல நாட்களுக்கு பிறகு குளிர்ச்சியான நிலை உருவாகியது.

மன்னவனூர், ஏப். 6-

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நேற்று மாலை 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பத்தின் பிடியில் இருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த வெப்பம் கொடைக்கானலையும் விட்டு வைக்க வில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பகலில் நிலவும் கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

Similar News