செய்திகள்
நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த பெண் ஊழியர்
நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவிற்கு புகார் மனு ஒன்று வந்தது. அந்த மனுவில் சைமன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை ரூ.50 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரி குமுதா தலைமையிலான குழுவினர் சைமன் நகர் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தனர். விசாரணையில் சைமன் நகர் மேலராமன்புதூரைச் சேர்ந்த சேவியர் பிரைட் மனைவி ஹெலன் அனிதா(வயது41) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ரூ.50 ஆயிரத்திற்கு ஆண்குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது.
அதிகாரிகள் ஹெலன் அனிதாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை நெல்லையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குமுதா வடசேரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஹெலன் அனிதா, ஆஸ்பத்திரி ஊழியர் கிரிஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஹெலன் அனிதா, கிரிஜாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிரிஜா கூறுகையில், நான் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹெலன் அனிதா தனக்கு குழந்தை இல்லை என்றும், குழந்தை ஒன்று வேண்டும் என்றும் கூறினார். அப்போது நான் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் வறுமையில் தவித்த தம்பதி ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை வாங்கி ஹெலன் அனிதாவிடம் கொடுத்தேன். தற்போது குழந்தையின் பெற்றோரை பற்றி தகவல் எதுவும் தெரியாது என்று கூறினார்.
ஏற்கனவே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை பெண்குழந்தைகள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டது. அந்த குழந்தைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டனர். தற்போது மீண்டும் ஒரு குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.