செய்திகள்
தாராபுரத்தில் காதல் திருமணம் செய்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரத்தில் இன்று காலை காதல் திருமணம் செய்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் சூல்தானியத்தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). இவரது மனைவி பானுபிருந்தா (23). இருவருக்கும் என்ஜினீயரிங் கல்லூரில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது.
இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி கடந்த 1½ வருடத்துக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். நவீன்குமார் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். பானுபிருந்தா அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நவீன்குமார் வீட்டுக்கு வந்தார். காலை எழுந்துபார்த்தபோது நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த மனைவி பானுபிருந்தா அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.