செய்திகள்
மானாமதுரை அருகே பெண் போலீஸ் தற்கொலை
மானாமதுரை அருகே ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஷர்மிளா தேவி (வயது 24). இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், தட்டிக்குளத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த 31/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 21/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
புதுக்கோட்டையில் தங்கி பணி செய்து வந்த ஷர்மிளா தேவி, நேற்று முன்தினம் தட்டிக்குளம் வந்துள்ளார். அங்கு பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை லட்சுமணன், மானாமதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஷர்மிளா தேவிக்கு திருமணமாகி 31/2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.