செய்திகள்
மானாமதுரை பகுதி மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழா: திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
மானாமதுரை ஆதிமுத்து மாரியம்மன், தயாபுரம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
மானாமதுரை:
மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடந்தது. தினமும் அம்மனுக்கு 16 வகையான அபிசேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் டிரஸ்டி சுப்பிரமணியன் தலைமையில் தீச்சட்டி எடுத்து வைகை ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கோவில் முன்பு உள்ள அக்கினி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பூசரகம், அலகு குத்திக் கொண்டு தீ மிதித்து வழிபாடு செய்தனர்.