செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: வருகிற 2-ந் தேதி நடக்கிறது

Published On 2017-03-25 13:06 GMT   |   Update On 2017-03-25 13:06 GMT
கடலூர் மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி 5 வயதிற்குட்பட்ட 2,48,286 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.

போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகள் 1995ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, தற்போது 22-வது முறையாக தமிழ் நாட்டிலுள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் போலியோ வைரஸ் தாக்குதல் வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக இந்த ஆண்டு முதற் கட்டமாக வருகிற 2-ந் தேதி அன்றும் இரண்டாவது கட்டமாக 30-ந் தேதி அன்றும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2,48,286 குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் விருத்தாச்சலம் கோமதி, மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளி அலுவலர் பிச்சையப்பன், கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் கண்ணன், தொலைபேசி துறை அலுவலர் சங்கர், என்.எல்.சி. மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கனி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மின்சார வாரிய இளநிலை பொறியாளர் செரி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Similar News