செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷ வண்டுகள் கடித்து 3 பேர் காயம்

Published On 2017-03-24 20:20 IST   |   Update On 2017-03-24 20:20:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த சென்று கொண்டிருந்த 3 பேரை வி‌ஷ வண்டுகள் கடித்தது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர்.

சிதம்பரம்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாரதாம்பாள் (வயது 60). இவர் மற்றும் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (46), மேலவன்னியூரை சேர்ந்த சிங்காரு(60) ஆகிய 3 பேரும் விளத்தூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து பறந்து வந்த வி‌ஷவண்டுகள் அவர்கள் 3 பேரையும் கடித்தது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News