செய்திகள்

விடுபட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்காக மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: அமைச்சர் தகவல்

Published On 2017-03-15 09:22 GMT   |   Update On 2017-03-15 09:22 GMT
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் கூடுதலாக 40 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி இன்று வரை நடந்தது.

5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. ஒரு கோடியே ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை தாண்டி ஒரு கோடியே 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் கூடுதலாக 40 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை தாண்ட காரணமாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News