செய்திகள்

தமிழக ராணுவ வீரர் பலி: மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2017-03-12 13:43 IST   |   Update On 2017-03-12 13:43:00 IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 12 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள கழுமரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்ற வீரரும் பலியாகியுள்ளார்.

தன் உயிரைத் தியாகம் செய்திருக்கும் வீரர்சங்கருக்கு வீர வணக்கத்தை செலுத்தி, அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடலுக்கு தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி அஞ்சலி செலுத்துவார்.

தமிழக வீரர் சங்கர் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News