செய்திகள்

கூடுவாஞ்சேரியில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்-பணம் பறிப்பு: 3 பேர் கைது

Published On 2017-03-11 12:36 IST   |   Update On 2017-03-11 12:36:00 IST
கூடுவாஞ்சேரியில் நடுரோட்டில், வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். ராஜா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

உடனே 3 பேரும் ராஜாவை கையால் தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து தப்ப முயன்றனர். இதற்குள் ராஜா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தப்ப முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் காரணையை சேர்ந்த வீரமணி, நந்திவரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News