செய்திகள்
நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்: போராட்டக் குழுவினர் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளதால் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 22 நாட்களாக விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த திட்டத்தை முற்றிலும் கைவிடும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்து வந்தனர்.
மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நெடுவாசல் சென்று போராட்டக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உறுதியளித்துள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இதனால் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், எங்களது கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.