செய்திகள்
ஏர் இந்தியா விமான பணி பெண்கள் மகளிர் தினம் கொண்டாடும் படம்.

மகளிர் தினம்: சென்னையில் இருந்து டெல்லிக்கு பெண்களே இயக்கிய விமானம்

Published On 2017-03-08 11:56 IST   |   Update On 2017-03-08 11:56:00 IST
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தை 2 பெண் விமானிகள் இயக்கினர்.
ஆலந்தூர்:

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம் புறப்பட்டு சென்றது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான இந்த விமானத்தை 2 பெண் விமானிகள் இயக்கினர். இன்று காலை 6.40 மணி அளவில் விமானி தீபா, துணை விமானி சோப்ரா ஆகியோர் இந்த விமானத்தை ஓட்டினார்கள். பணிப்பெண்கள் 7 பேர் அந்த விமானத்தில் இருந்தனர். விமானத்தில் வந்த பயணிகளுக்கு அவர்கள் பூக்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து விமானி தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 11 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வருகிறேன். பெண்கள் எந்த வி‌ஷயத்திலும் சோர்வு அடையாமல் திறமையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்.

மகளிர் தினத்தன்று பெண்களே விமானத்தை இயக்கியது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் மற்றும் பணிப் பெண்களை அதிகாரிகள் பாராட்டினர்.

Similar News