செய்திகள்

கோபி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஒருவர் பலி

Published On 2017-02-28 10:28 IST   |   Update On 2017-02-28 10:28:00 IST
கோபி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

திருப்பூர் மாவட்டம் கருமாரபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). இவரது உறவினர்கள் தியாகராஜன் (33), ராஜேந்திரன் (42).

இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள மாயவனம் கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று காரில் வந்தனர். பிறகு இரவு 7 மணியளவில் ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

கோபி அருகே உள்ள கெட்டிசெலியூர் அருகே ஒரு பிரிவில் சென்றபோது திடீரென கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது.

இதில் சண்முகம் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சண்முகம் உயிருக்கு போராடினார். அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தவிபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News