செய்திகள்

சென்னிமலை அருகே லாரி மோதி வாலிபர் நசுங்கி பலி: நண்பர் படுகாயம்

Published On 2017-02-27 23:10 IST   |   Update On 2017-02-27 23:10:00 IST
சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் லேசான படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
ஈரோடு:

சென்னிமலை, அருண கிரிநாதர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). சுரேஷ் சம்பவத்தன்று தனது நண்பர் திருமூர்த்தி என்பவருடன் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை திருமூர்த்தி ஓட்ட சுரேஷ் பின்னால் உட்கார்ந்து வந்தார். சென்னிமலை- பெருந்துறைரோடு எல்லைமேடு பஸ் நிறுத்தம் அருகேசென்றபோதுஅந்த வழியாகவந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் திருமூர்த்தியும், சுரேசும் தூக்கி வீசப்பட்ட னர். சுரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. திருமூர்த்திக்கு காலில் லேசமான காயம் ஏற்பட்டது.

உயிருக்காக போராடி கொண்டிருந்த சுரேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது நண்பர் திருமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News