செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 19 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் 19 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
கடலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த 169 மதுக்கூடங்கள் இன்று முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 19 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை வருமாறு:-
1.கடலூர் புதுநகர்-2,
2.கடலூர் முதுநகர்-3,
3.சிதம்பரம் -1,
4.புதுசத்திரம் - 1,
5.கருவேப்பிலங்குறிச்சி-1,
6.மங்கலம்பேட்டை - 2,
7.பெண்ணாடம் - 1,
8.குள்ளஞ்சாவடி - 1,
9. நெய்வேலி டவுன் ஷிப்- 1,
10.காட்டுமன்னார்கோவில் - 1,
11.பண்ருட்டி - 1,
12.திட்டக்குடி - 1,
13.ஆவினங்குடி -1,
14.ராமநத்தம் -2.