செய்திகள்

பெண்ணாடத்தில் தீபா பேரவை பேனர் கிழிப்பு: போலீசார் விசாரணை

Published On 2017-02-24 17:53 IST   |   Update On 2017-02-24 17:53:00 IST
பெண்ணாடத்தில் மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தீபா பேரவை சார்பில் வைக்கப்பட்ட தீபா பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர்.

பெண்ணாடம்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் விழாவையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் தீபா பேரவை சார்பில் இன்று டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.

பின்னர் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் டிஜிட்டல் பேனரை யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தீபா பேரவையினர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News