செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மயங்கி கிடந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்

Published On 2017-02-24 17:10 IST   |   Update On 2017-02-24 17:10:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் மயங்கி கிடந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மூதாட்டியை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News