செய்திகள்

பண்ருட்டியில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-02-22 16:06 IST   |   Update On 2017-02-22 16:06:00 IST
பண்ருட்டியில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:

பண்ருட்டி செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). பழ வியாபாரி. இவருக்கு திருமணமாகி மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் குமார் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

குமாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து, எதற்காக குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News