செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26-ந் தேதி நடக்கிறது
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 26-ந் தேதி நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கம், மாநில அமைப்பு சங்கம் உள்பட 3 இயக்கம் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. முகாமில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிய 97154-71803, 99423-60982 செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளுப்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆண்,பெண் மாற்றுத் திறனாளிகள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.