செய்திகள்

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்

Published On 2017-02-21 02:46 GMT   |   Update On 2017-02-21 02:46 GMT
வீராணம் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன்மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டது.

வறண்டு கிடந்த இந்த ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.50 அடியை எட்டியது. ஆனால் கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.

கீழணையில் இருந்து தண்ணீர் வராததாலும், பருவமழை தவறியதாலும் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால் வறட்சியின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டது.

Similar News