செய்திகள்
வேலை தேடி வரும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது
வேலை தேடி வரும் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
வேலை தேடி வரும் பெண்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி சிலர் அழைத்து செல்கிறார்கள். இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி ஈரோடு சூரம்பட்டி ராஜாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர்.
அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக மெகபூப் பாட்சா, (வயது 39), பிரேமா (27), பேபி (46) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.