செய்திகள்

சிதம்பரம் அருகே பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் வாலிபர் கைது

Published On 2017-02-17 21:03 IST   |   Update On 2017-02-17 21:03:00 IST
சிதம்பரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பானுமதி(வயது 34).

சந்திரசேகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பானுமதி தன் குழந்தைகளுடன் கோவிலாம்பூண்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பானுமதியிடம் சந்திரசேகரனின் தம்பி சதீஷ் குமார் ஆபாசமாக பேசி உல்லாசத்துக்கு அழைத்தார்.

இதில கோபமடைந்த பானுமதி அவரை திட்டினார். இதையடுத்து சதீஷ்குமார் அவரது தம்பி நாகராஜ், உறவினர் ரத்தினசாமி ஆகியோர் சேர்ந்து பானுமதியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கிள்ளை போலீசில் பானுமதி புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். நாகராஜ், ரத்தினசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Similar News