செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்: போலீசார் விசாரணை

Published On 2017-02-17 17:03 IST   |   Update On 2017-02-17 17:03:00 IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். யார் அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சம்பவத்தன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த நபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News