செய்திகள்
ஈரோட்டில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ஈரோட்டில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, தென்றல் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது31). இவருக்கு திருமணமாகி விட்டது.
அர்ஜுனன் சரியாக வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை இது தொடர்பாக மீண்டும் அர்ஜினனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அர்ஜினன் தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) குடித்தார்.
இதில் உயிருக்கு போராடிய அர்ஜுனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அர்ஜினன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.