செய்திகள்

கடலூரில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன்கள்

Published On 2017-02-13 16:00 IST   |   Update On 2017-02-13 16:00:00 IST
கடலூர் கடற்கரையோரத்தில் டால்பின் மீன் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் அருகே தொத்திக்குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் கடற்கரையோரத்தில் டால்பின் மீன் இறந்து கிடந்தது. அது 12 அடி நீளமும், 300 கிலோ எடையும் இருந்தது.

அந்த மீன் அருகில் மற்றொரு டால்பின் மீனும் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படை போலீசார், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர் பூனம் சந்த் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

இறந்து கிடந்த டால்பின் மீன்களை பார்வையிட்டனர். அவைகள் எப்படி? இறந்தன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News