செய்திகள்

நாளை தலைமைச் செயலகம் செல்வேன்: பன்னீர் செல்வம் அதிரடி

Published On 2017-02-12 23:48 IST   |   Update On 2017-02-12 23:48:00 IST
தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பு அடைந்துள்ள நிலையில், நாளை தலைமைச் செயலகம் செல்லப் போவதாக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பு அடைந்துள்ள நிலையில், அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை கைபற்ற பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா தரப்பினரிடையே கடுமையான போர் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவாத்தூர் சென்று அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அங்கிருந்தபடியே எம்.எல்.ஏ-க்களுடன் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் நாளை தலைமைச் செயலகம் செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில், "அரசு எந்திரம் நல்லபடியாக செயல்படுகிறது. தலைமை செயலர், டி.ஜி.பி., ஆகியோரை அழைத்து அரசு நிர்வாகம் குறித்து பேசினேன். நாளை தலைமை செயலகத்திற்கு நேரில் செல்வேன்" என்று கூறினார்.

Similar News