செய்திகள்
வேதாரண்யம் அருகே இளம்பெண் மாயம்: வாலிபர் மீது புகார்
வேதாரண்யம் அருகே இளம்பெண் மாயமானார். இது தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதுர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகள் ரேணுகா(19). பி.ஏ பட்டப்படிப்பு பாதியில் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 8-ந்தேதி இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து பன்னீர்செல்வம் தன் மகளை ஆயக்காரன்புலம் பாப்புரெட்டி குத்தகை துரைராஜ் மகன் செல்வம் கடத்தி சென்று விட்டதாக கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.