செய்திகள்
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்: 500 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 500 வழக்குகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிமன்றம்-2 ன் நீதிபதி கருணாநிதி துவக்கி வைத்தார்.
உரிமையியல் வழக்குகள், குடும்பநல வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள் என 700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நீதிபதிகள் மீனாகுமாரி, பாக்கியஜோதி, பிரபாகரன், ஜெயவேல் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் லோகநாதன், சுரேஷ், பாகீரதி ரங்கராஜன் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். வழக்கின் இருதரப்பு வழக்கறிஞர்கள், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.
515 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 76 ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. இந்த லோக் அதாலத் மூலம் 875 பேர் பயன் பெற்றனர்.
வழக்கறிஞர்கள் ரவிக்குமார், அப்துல் ஹக்கீம், ஆசைதம்பி, சத்தியமூர்த்தி, பார்த்தசாரதி, தாங்கி பழனி, வடிவேல், துரைமுருகன், சுந்தர் உள்ளிட்டோர் லோக் அதாலத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.