செய்திகள்
ரூ. 17 லட்சம் அமெரிக்க டாலர் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த இருந்த 17 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஷேக்சாய்பு, புலாம் சாகுல் ஆகியோரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வைத்திருந்த ‘டீ பிளாஸ்கை’ சோதனை செய்தபோது அமெரிக்க டாலர் நோட்டுகளை சுருட்டி வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும். இதையடுத்து ஷேக் சாய்பு, புலாம் சாகுல் ஆகியோரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.