செய்திகள்
மது போதையில் நண்பரை கத்தியால் வெட்டிய ரவுடி கைது
நந்தம்பாக்கம் நேதாஜி காலனியில் மது போதையில் நண்பரை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
நந்தம்பாக்கம் நேதாஜி காலனி பூம்புகார் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (47) ரவுடி. இவர் நேற்று பரங்கிமலை பட்ரோட்டில் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தார். இதை அவரது நண்பர் லோகநாதன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநாதனை வெட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.