செய்திகள்

இளையான்குடி அருகே திருமணமான இளம்பெண் மாயம்

Published On 2017-02-03 14:47 IST   |   Update On 2017-02-03 14:47:00 IST
இளையான்குடி அருகே திருமணமான இளம் பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவரது மகள் பானுப் பிரியா (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. பானுப்பிரியாவின் மாமியார் உடல் நலக் குறைவு காரணமாக பரமக்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று மாமியாரை பார்க்க செல்வதாக தாய் லட்சுமியிடம் கூறி விட்டு பானுப்பிரியா வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து லட்சுமி இளையான்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

Similar News