செய்திகள்

ஓடும் பஸ்சில் பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து பலி

Published On 2017-02-03 13:42 IST   |   Update On 2017-02-03 13:42:00 IST
ஓடும் பஸ்சில் பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து பலி சிதம்பரத்தில் ஓடும் பஸ்சில் பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் திருவேங்கடம்(வயது 16). சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் திருவேங்கடம் பிளஸ்-1 படித்து வந்தார்.

இன்று காலை திருவேங்கடம் வல்லபம்படுகையில் இருந்து சிதம்பரத்துக்கு அரசு பஸ்சில் நண்பர்களுடன் புறப்பட்டார்.

சிதம்பரம் மந்தக்கரை பஸ்நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது திருவேங்கடம் திடீரென்று பஸ்சில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை நண்பர்கள் ஆட்டோவில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திருவேங்கடத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மாணவன் திருவேங்கடம் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News