செய்திகள்

மானாமதுரை அருகே பன்றி காய்ச்சலுக்கு நாடக நடிகர் பலி

Published On 2017-02-03 09:40 IST   |   Update On 2017-02-03 09:41:00 IST
மானாமதுரை அருகே பன்றிக்காய்ச்சல் தாக்கி நாடக நடிகர் இறந்தார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராம நாதன் மகன் மாணிக்க வாசகம் (வயது 43). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். மேலும் அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.

மாணிக்கவாசகம் கடந்த 26-ந் தேதி காய்ச்சல் பாதிப்புடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மாணிக்கவாசகம் இறந்து போனார்.

அப்போது தான் அவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு இருந்ததும், அதன் பாதிப்பால் தான் இறந்து போனதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Similar News