செய்திகள்
சிவகங்கையில் தேடப்பட்ட ரவுடிகள் 10 பேர் கைது
சிவகங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் ஈஸ்வரன் (வயது 27) , காளியப்பன் (22), உதயகுமார் (47), சதாசிவம் (41), சங்கர் ஆகியோர் அங்கு நிற்பதை கண்டனர்.
அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரை கைது செய்தனர். சங்கர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ரோந்து சென்றபோது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட செல்வராஜ் (22), ஜான் பீட்டர் (27), முகமது சிராஜுதீன் (22) நிஜாமுதீன், முத்துக்குமார் (24), அப்துல் ஹக்கீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.