செய்திகள்

காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

Published On 2017-02-02 08:54 IST   |   Update On 2017-02-02 08:54:00 IST
காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தி நகரில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 8-ந் தேதி புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பிதழை ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரி, வேத பண்டிதர் நாராயணன், நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

Similar News