செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
கடலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிஞ்ச்சிப்பாடி:
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மகாத்மா காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர்.
எனவே அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வானதி ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னரே இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர் கூறினார்.