செய்திகள்

பூவந்தி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர்கள் காயம்

Published On 2017-02-01 15:02 IST   |   Update On 2017-02-01 15:02:00 IST
பூவந்தி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்தியன் ஆயில் குடோனில் இருந்து இன்று அதிகாலை ஒரு லாரி லோடு ஏற்றிக் கொண்டு மதுரையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி அரசனூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து காளையார் கோவிலுக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரியும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இதனால் இரு லாரிகளின் முன் பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தது. இதனால் சரக்கு லாரி டிரைவர் பாண்டி (வயது 55)யும், டேங்கர் லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தனர். டேங்கர் லாரி டிரைவரின் கால் முறிந்தது. மயக்க நிலையில் இருந்ததால் அவரது பெயர், ஊர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 டிரைவர்களையும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தவிபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News