செய்திகள்
காரைக்குடி, நெற்குப்பையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 7 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்றவை நடத்த தடை இல்லை என்ற போதிலும், இதனை நடத்த முறையாக விண்ணப்பித்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற வேண்டும். இதனை பெறாமல் காரைக்குடி தாலுகா கொத்தமங்கலம் புது கண்மாய் பகுதியில் சிலர் மஞ்சுவிரட்டு நடத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில், அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கருப்பையா, பெரியகருப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருநாவுக்கரசு, கருணாநிதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் நெற்குப்பை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் ராக்கமுத்து புகார் கொடுத்தார். இதன் பேரில் நெற்குப்பை போலீசார் விசாரணை நடத்தி அழகையா, பாகம்பழம் முத்தலி அம்பலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.