செய்திகள்
வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை
வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பன்னாள் நடுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). விவசாயி. இவர் 1½ ஏக்கர் மானாவாரி நிலத்தில் நேரடி நெல் சாகுபடி செய்திருந்தார்.
போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி புதர் மண்டியது. இதனால் ரமேஷ் வேதனையில் இருந்து வந்தார்.
வயலுக்கு சென்ற அவர் பயிர் கருகியதை பார்த்து மனம் உடைந்தார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ரமேசுக்கு பெரிய நாயகி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.