செய்திகள்
சீர்காழி அருகே விபத்தில் மீனவர் பலி
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் ஆர்ச்சில் மோதி மீனவர் பலியானார். இது குறித்து பூம்புகார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரை சேர்ந்தவர் பழனி (35) மீனவர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பல்லவனம் என்ற இடத்தில் ஆர்ச் சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பழனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து பூம்புகார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.