செய்திகள்
காரைக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் காதல் தோல்வியில் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 60). இவரது மகன் மணீஷ்குமார் (30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் மணீஷ்குமார் தனது விருப்பதை தெரிவித்தபோது, அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.