செய்திகள்

பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

Published On 2017-01-30 08:08 GMT   |   Update On 2017-01-30 08:08 GMT
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இன்று காலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் 26.1.17 அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்தது குறித்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் பேரவையில் வாசித்தார்.

அப்போது, இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தமிழகத்தை சேர்ந்த இளவரசன், சுந்தர பாண்டியன் உள்பட 18 ராணுவ வீரர்கள் பலியானதற்கு அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த துயர சம்பவத்தில் இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும், இதில் தமிழக வீரர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சபையின் அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காத்தனர்.

Similar News