செய்திகள்

வேளாங்கண்ணி மாதா ஆலய சிலுவை தீப்பிடித்து எரிந்தது

Published On 2017-01-30 10:55 IST   |   Update On 2017-01-30 10:55:00 IST
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய சிலுவை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து மற்றும் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் பழமையை மாற்றாமல் மறு சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் ஆலயத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய சிலுவை திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து அங்கு வந்த ஆலய நிர்வாகத்தினர் இது குறித்து ஊழியர்களிடம் விசாரித்தனர். சிலுவையில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி.விளக்கில் தேங்கி இருந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என தெரிய வந்தது.

இந்த சம்பவம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News