செய்திகள்

ஆண்டிமடம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2017-01-26 19:42 IST   |   Update On 2017-01-26 19:42:00 IST
ஆண்டிமடம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் கூலிதொழிலாளி.  இவரது மகள் அல்லிராணி (வயது20). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கோயம்புத்தூர் அடுத்த கோவில்பாளையத்தில் ஒரு தனியார் பஞ்சுமில்லில் சுமார் 2 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர், பொங்கலுக்கு சொந்த ஊரான ராங்கியம் வந்துள்ளார். 

பெற்றோர்கள் அல்லிராணிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சிலம்பூரிலிருந்து பெண் கேட்டு வந்தனர்.  இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடு செய்தனர்.  நேற்று முன்தினம் அல்லிராணியை வீட்டில் விட்டுவிட்டு, பழனிவேல் ஜெயங்கொண்டம் வனத்துறைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். 

மேரி பொருட்கள் வாங்க வெளியில் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அல்லிராணியை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மேரி ஆண்டிமடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News