செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

Published On 2017-01-26 10:11 GMT   |   Update On 2017-01-26 10:11 GMT
அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கு மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கிறது. அந்த முகாமில் (108 ஆம் புலன்சுக்கு ஓட்டுநர், செவிலியர்), மெக்கானிக், வெல்டர், பிட்டர், டர்னர், எலக்ட்ரிஷியன், பிளம்பர், ஏ.சி. மெக்கர்னிக், ஆயத்த ஆடை (தையல் பயிற்சி முடித்தவர்கள்),  ஆகிய வேலைகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, கல்வித்தகுதி, அனுபவ சான்று அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News