செய்திகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. கோடியக்கரை, ஆதனூர், கருப்பம்புலம், புரவகுலம், கத்திரிபுலம், வாய்மேடு, தகட்டூர், செம்போடை, வெள்ளப்பள்ளம், தலைஞாயிறு ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.
இந்த மழை வேர் கடலை மற்றும் பூஞ்செடிகள் சாகுபடிக்கு உகந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பள பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் 33 மில்லி மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 54.8 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.