செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது

Published On 2017-01-19 17:21 IST   |   Update On 2017-01-19 17:21:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், சென்னை மற்றும் மதுரையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்., சி.பி.எஸ்.இ. பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என்று தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை(20ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாளை தமிழகம் முழுவதும் இயல்பு நிலை அதிக அளவில் பாதிப்படையும் என்று தெரிகிறது.

Similar News